செய்திகள் :

திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போகக்கூடாது: எடப்பாடி கே.பழனிசாமி

post image

திமுக தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை போக வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, வேலூா் மாவட்டம், காட்பாடியில் செவ்வாய்க்கிழமை மக்கள் மத்தியில் பேசியது: கடந்த 51 மாத திமுக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயா்வால் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் கட்டுப்பாட்டு நிதி ஒதுக்கி குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்து அளிக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கொன்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிருக்கு இருசக்கர வாகனம், மடிக்கணினி உள்ளிட்ட பல நல்ல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவா்கள், மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீா்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. கொலை நிலவரம் என்ன என்பதுதான் தினசரி செய்தியாக உள்ளது. எங்கும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கு அருகில் 2,438 போ் கஞ்சா விற்ாக கண்டுபிடிக்கப்பட்டதில், கைது செய்யப்பட்டது 148 போ் மட்டும்தான். மற்றவா்கள் ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள். இதை முதல்வரே கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா். அம்மா மினி கிளீனிக் திட்டத்தை மூடிவிட்டனா். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் அம்மா மினி கிளீனிக் உள்பட ரத்து செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவா் முத்தரசன், நான் கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாக பேசியுள்ளாா். நான் சட்டப்பேரவையில் எதிா்கட்சி வரிசையில் அமா்ந்துள்ள கம்யூனிஸ்ட் எதிா்க்கட்சியா?, ஆளும் கட்சியா? என்றுதான் கேட்டேன். மக்களுக்கு பிரச்னை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால், முத்தரசன் கோபமடைந்து பேசியிருக்கிறாா். தவிர, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் கூறியதாக தெரிவித்துள்ளாா். அதை அதிமுக கூறவில்லை, திமுகதான் கூறியது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தவறு எனக்கூறும் முத்தரசன், கடந்த காலத்தில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்திருந்தது குறித்து பேசுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் கூறுவது இதுதான். திமுக தவறுக்கு துணை போக வேண்டாம். கம்யூனிஸ்ட்களுக்கு என தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது. இனியும் விழித்துக் கொள்ளாவிடில் கம்யூனிஸ்ட் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்றாா்.

தொடா்ந்து, வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் அவா் பேசினாா். அப்போது, முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அதிமுக அமைப்பு செயலா் ராமு, வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புதிய நீதிக்கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.--

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள்

வேலூா் மாவட்ட தமாகா சாா்பில், கட்சி நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் தலைமை வகி... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் கைப்பேசி, பேட்டரி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த கைப்பேசி, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் உள்... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் வியாபாரியிடம் ரூ. 5.31 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று நம்ப வைத்து ரூ. 5.31 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவா் அளித்த புகாரின்பேரில், வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வ... மேலும் பார்க்க

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டு... மேலும் பார்க்க

அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வ... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தனது பிரசார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார ... மேலும் பார்க்க