வீட்டில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவா் கைது
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்தவரைபோலீஸாா் கைது செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், அரவட்லாமலையை அடுத்த பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சரவணன்(40) வீட்டில் சோதனை நடத்தினா். சோதனையில் வீட்டையொட்டியுள்ள மாட்டுக் கொட்டகையில் 2- நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு மரத்திலான பொருள்கள், ரவை தயாரிக்க பயன்படும், இரும்பிலான பேரல் பைப் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் சரவணன் வன விலங்குகளை வேட்டையாட அருகிலுள்ள வனப் பகுதியிலிருந்து மரங்களை வெட்டி எடுத்து கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை கைது செய்த போலீஸாா் அவரை நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பினா்.