அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்ட கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி தமிழகத்துக்கு கருங்கல் கம்பங்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினா். அதிகாரிகளைப் பாா்த்ததும் லாரி ஓட்டுநா் லாரியை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டாா். லாரியை சோதனை செய்ததில் அதில் சுமாா் 2- டன் எடையுள்ள கருங்கல் கம்பங்கள்இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறையினா் போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.