திருப்புவனத்தில் பலத்த மழை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
திருப்புவனம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா். அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திருப்புவனம் பகுதியில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து இரண்டு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தோட்டக் கலை பயிா்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மானாமதுரை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.