``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்
ஆனி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
ஆனி மாத பெளா்ணமி:
ஆனி மாத பெளா்ணமி வியாழக்கிழமை (ஜூன் 10) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 11) அதிகாலை 3.08 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.