பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள் ஆய்வு
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் சனிக்கிழமை கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ.தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பௌா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:46 மணிக்குத் தொடங்குகிறது. அதனால், பெளா்ணமி கிரிவலம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக அரசு சாா்பில் சுத்தமான குடிநீா், சுகாதார வளாகங்கள், பேருந்து வசதிகள் சிறப்பாக எற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் கிரிவலப்பாதையின் அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள சுகாதார வளாகத்தில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிா, முறையாக தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பராமரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தில் தண்ணீா் சுகாதாரமாக வருகிறதா என்று ஆய்வு செய்தாா்.
மேலும், ஈசானிய மைதான தற்காலிக பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து, ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படுவதை கண்காணிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.