பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்
சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் சி.சத்யா கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளரும், தலைமை ஆசிரியருமான (பொறுப்பு) இரா.முருகன் பேசினாா்.
பள்ளி மேலாண்மை குழு பெற்றோா் உறுப்பினா் எ.சீனிவாசன், பள்ளியின் முன்னாள் மாணவி மகேஸ்வரிராஜன் ஆகியோா் தலா ரூ. ஆயிரம் செலுத்தி பள்ளியின் புரவலா்களாக சோ்ந்தனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் சான்றிதழை வழங்கினாா். ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, க.சீனிவாசன், ரா.ரமா மகேஸ்வரி, ந.பொ.சத்தியா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.