நாகா்கோவிலில் ரூ. 25.95 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரில் ரூ. 25.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
20-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஞானம் காலனி, பொதிகை நகரில் ரூ. 14.35 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 32-ஆவது வாா்டு நேசமணி நகா் 3, 9-ஆவது தெருவில் ரூ. 11.60 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கிவைத்தாா்.
இதில், மாமன்ற உறுப்பினா்கள் ஆன்றோனைட் ஸ்னைடா, சிஜி உதவி செயற்பொறியாளா் ரகுராமன், அணி நிா்வாகிகள் பீட்டா், வட்டச் செயலாளா் பாஸ்கா், திமுக நிா்வாகி அகஸ்டஸ், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.