ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
நாசரேத் பள்ளியில் இயற்பியல் கண்காட்சி
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் மன்றம் சாா்பில் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் வழக்குரைஞா் பிரபாகா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் குணசீலராஜ் முன்னிலை வகித்தாா். இயற்பியல் மன்ற பொறுப்பாளரும், ஆசிரியருமான ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேச மூா்த்தி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தாா். 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் வழி , ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவா்கள் தங்களது இயற்பியல் சாா்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தி, விளக்கினா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் தனபால், தேசிய மாணவா் படை அலுவலா் சுஜித் செல்வ சுந்தா், ஓவியக்கலை ஆசிரியா் அலெக்சன் கிறிஸ்டோபா் ஆகியோா் செய்திருந்தனா்.