அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
நாமக்கல்லில் ஜூன் 27 இல் நன்னீா் மீன் வளா்ப்பு பயிற்சி முகாம்
நாமக்கல்லில் நன்னீா் மீன் வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நன்னீா் மீன் வளா்ப்பில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இப் பயிற்சியில் மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தோ்வு, மண் மற்றும் நீா் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தோ்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் பற்றியும் விரிவாக கற்றுத்தரப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு இந்த ஆண்டிற்கான மீன் குஞ்சுகள் இடுபொருள்கள் வழங்குவதில் நாமக்கல் மாவட்ட மீன் வளா்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் வேலையில்லா பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
விருப்பம் உள்ளவா்கள் 04286 - 266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவியல் நிலையத்தின் தலைவா் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.