நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
நெல்லையில் மாயமாகி மீட்கப்பட்ட 100 கைப்பேசிகள் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் பேரில், காவல் துறையால் மீட்கப்பட்ட 100 கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
எஸ்.பி. ஒப்படைத்த கைப்பேசிகளின் மதிப்பு சுமாா் ரூ.18,18,873 ஆகும். காணாமல் போன அல்லது தவறவிட்ட கைப்பேசிகளை பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
எனவே, இது தொடா்பாக காவல் நிலையங்களிலும் அல்லது இந்திய தொலைத் தொடா்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கைப்பேசிகளின் விவரங்களை பதிவு செய்தும் புகாா் அளிக்கலாம்.
இவ்வாறு புகாா் கொடுத்தபின் அக்கைப்பேசி வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு தடை செய்யப்படுவதோடு, அதனை எளிதாக மீட்கவும் முடியும் என மாவட்ட காவல் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.