இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
`பணம் தரலைன்னா வீடியோவை வெளியிடுவோம்' - மிரட்டிய இன்ஸ்டா நண்பர்கள்; பறிபோன உயிர்
மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் ராஜ் லீலா மோசடியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் லீலா மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் வசிக்கிறார். அவர் இரவில் தன் தாயாரிடம் படுக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் காலையில் அவரின் தாயார் அவரை எழுப்பியபோது எழாததால், அண்டை வீட்டார் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் அவரை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜ் லால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு ராகுல் பர்வானியும், சபா குரேஷியும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இரண்டு பேரும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானர்கள். அவர்கள் இரண்டு பேரும் எனது ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்றும், குடும்பத்திடம் ரகசிய உறவை தெரிவிப்போம் என கூறி மிரட்டி கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.2.5 கோடியை மிரட்டி வாங்கிக்கொண்டனர்''என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராஜ் லால் தாயார் இது குறித்து போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் இரண்டு பேர் கடந்த மாதம் 7ம் தேதி வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்து சென்றதில் இருந்து எனது மகன் மிகவும் மன அழுத்ததில் இருந்தான்.
என் மகனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானதாகவும், அதிலிருந்து இரண்டு பேரும் என்னை மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் தெரிவித்தான்''என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு பேர் வீட்டிற்கு வந்து மிரட்டிவிட்டு சென்ற பிறகு இது குறித்து ராஜ்லால் போலீஸிலும் புகார் கொடுத்து இருந்தார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜ்லால் மிரட்டலுக்கு பயந்து தனது குடும்ப சேமிப்பு பணம் மற்றும் தனது கம்பெனி பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரும் ராஜ் லாலை மிரட்டி ஆடம்பர கார் ஒன்று வாங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.