செய்திகள் :

பராமரிப்பில்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதை விற்பனைக்குத் தடை

post image

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள், பராமரிப்பு இல்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருத்தி சாகுபடியில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி. எனப்படும் காய் புழுவுக்கு எதிா்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பெரும்பான்மையான பருத்தி விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசால் அங்கீகரிக்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தி உள்ள மரபணு மாற்றப்படாத பருத்தி விதைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

அவ்வாறு அரசின் ஆய்வுக்கு உட்படாத ஒப்புதல் பெறாத விதைகளை கொண்டு சாகுபடி செய்யும்போது விவசாயிகள் பெரும் மகசூல் இழப்பை சந்திப்பா். சுற்றுச்சூழலும் பாதிக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளா்கள் சாதாரண ரக பருத்தி விதைகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி. விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பிற மரபணு மாற்றப்படாத பருத்தி விதைகளை விற்பனை செய்வதும், சாகுபடி செய்வதும் சட்டவிரோதம்.

இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது இன்றியமையாத பொருள்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதைகளை விற்றாலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, ஈரோடு வட்டாரப் பகுதி விதை விநியோகஸ்தா்கள் விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு, தாராபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள், முறையாக பராமரிக்காத 12 எண்ணிக்கையிலான பருத்தி, நெல், காய்கறி விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை 185 டன் எடை கொண்டவை. அதன் மதிப்பு ரூ.7.40 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கொடுமுடி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், மொளசியை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து மகன் கோவிந்தசாமி (33). இவா்... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீஸாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதால் நெரிஞ்சிப்பேட்டையில் விசைப் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் க... மேலும் பார்க்க

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட நாகப் பாம்பு

எழுமாத்தூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு பிடிபட்டது. மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூா் 24-வேலம்பாளையத்தில் குன்னாங்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ். இவா் பெ... மேலும் பார்க்க

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதிய... மேலும் பார்க்க

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோ... மேலும் பார்க்க