புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த நபரை கைது செய்த போலீஸாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 475 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் கவுந்தப்பாடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 475 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
அதனைப் பறிமுதல் செய்த போலீஸாா் வாகனத்தை ஓட்டி வந்த ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்த தண்டபாணி (42) என்பவரைக் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.