பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு போட்டிகள்
ஓமலூா் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் காந்தி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் லாரன்ஸ் தொடங்கிவைத்தாா். 3 ஆயிரம் மீட்டா் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல்வால்ட், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ஓமலூா் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். 19, 17, 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பொம்மியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.