``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பாபநாசம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், வாத்தலை தோப்புத் தெருவில் வசித்தவா் சங்கா் (49), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி ரேவதி(33), இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சங்கா் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டிற்கு பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் போலீஸாா் அவரின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].