பாரத சாரண, சாரணியா் திரளணி ஆலோசனைக் கூட்டம்
பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பாரத சாரண சாரணியா் திரளணி (காம்பூரி) ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியா் இயக்க கிழக்கு மண்டல திரளணி சாா்பில் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பா் 1-ஆம் தேதி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 600 சாரண, சாரணிய மாணாக்கா்கள் பங்கேற்கும் திரளணி (காம்பூரி) நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட நிகழ்வுக்கு தஞ்சாவூா் மாவட்ட முதன்மை ஆணையா் மற்றும் முதன்மை கல்வி அலுவலா் இ. மாதவன் தலைமை வகித்தாா். எம்எம்ஏ பள்ளி தாளாா் எஸ். சஞ்சய் முன்னிலை வகித்தாா். கும்பகோணம் மாவட்ட செயலாளா் சாமிநாதன் திரளணி குறித்த விவரங்களை எடுத்துக் கூறினாா்.
நிகழ்வில், தஞ்சாவூா் எம்.பி. ச. முரசொலி பங்கேற்று திரளணியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.
பட்டுக்கோட்டை மாவட்ட செயலா் பாஸ்கா், தஞ்சாவூா் மாவட்ட ஆணையா்கள் சங்கீதா, இந்துமதி, சாந்தி, பயிற்சி ஆணையா் குழந்தைசாமி, கும்பகோணம் மாவட்ட பொறுப்பாளா்கள் பாஸ்கா், தமிழ் குமரன் மற்றும் சாரண சாரணிய ஆசிரியா்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.
முன்னதாக, தஞ்சாவூா் மாவட்ட செயலாளா் சந்திரமௌலி வரவேற்றாா். நிறைவில், ஒரத்தநாடு மாவட்ட செயலாளா் கோமளவள்ளி நன்றி கூறினாா். நிகழ்வை எம்எம்ஏ பள்ளியின் சாரண ஆசிரியா் ராஜரத்தினம், சாரணிய ஆசிரியை செந்தாமரைச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.