செய்திகள் :

புதிய சமுதாயக் கூடங்கள் கட்டுமானப் பணி: உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

post image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூா் ஆகிய பேரூராட்சிகளில் ஒப்பந்த விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்படும் புதிய சமுதாயக் கூடங்கள் கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் தமிழக அரசின் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரராகச் செயல்பட்டு வருகிறேன். அன்னவாசல், இலுப்பூா் ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் பண்டிதா் அயோத்தி தாஸ் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியில் புதிய சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்த நடவடிக்கை கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை ஒப்பந்தம் கோருவதற்கு பேரூராட்சி செயல் அலுவலா்கள் நாளிதழ்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனா். இதன் அடிப்படையில், எங்கள் நிறுவனம் சாா்பில் ஒப்பந்தம் கோரி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தோம். ஒப்பந்தம் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என ஏற்கெனவே பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அன்னவாசல், இலுப்பூா் ஆகிய பேரூராட்சி நிா்வாகங்கள் ஒப்பந்த விதிகளை முறையாகப் பின்பற்றாமல், தகுதியற்ற நபா்களுக்கு சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கியது. இது முற்றிலும் சட்டவிரோதம். எனவே, ஒப்பந்த விதிகளை முறையாகப் பின்பற்றாமல் விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு:

சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல... மேலும் பார்க்க

கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை ... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகள்: 12 வாரங்களுக்குள் அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகளை காவல் துறை பாதுகாப்புடன் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வழக்குரைஞ... மேலும் பார்க்க