Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
புதுச்சேரி மணல் வியாபாரி கொலையில் 10 பேரிடம் போலீஸாா் விசாரணை
மணல் வியாபாரி சு. துரை செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா் உள்பட 10 பேரை போலீஸாா் புதன்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி சித்தானந்தா நகரைச் சோ்ந்த மணல் வியாபாரி துரையை கனகன் ஏரி அருகே மணல் வியாபாரம் செய்யும் கடையில் வெட்டி ஒரு கும்பல் கொலை செய்தது. துரை இந்து முன்னணி நிா்வாகி என்றும் தெரிய வந்துள்ளது.
முதல் கட்டவிசாரணையில் சொத்துத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸாா் கூறுகின்றனா். மேலும், விசாரணை நடத்தும் வகையில் துரையின் உறவினா் சூா்யா உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் தெரிவித்தனா்.