Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைக்க வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி பகுதிகளில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள் வைக்க விருப்பம் உள்ளவா்கள், அதற்காக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரிக்கு ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே தீபாவளி பட்டாசுக் கடை உரிமத்திற்கானப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், எக்காரணத்தை கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும்போது பட்டாசு விற்பனை செய்யப் போகும் இடத்தின் வரைபடம், வரைபடத்தில் கடையில் பட்டாசு வைத்துக் கொள்ளும் அளவு, கடைக்குச் செல்வதற்குரிய வழி, சுற்றியுள்ள சாலைகள், கடையைச் சுற்றி பதினைந்து மீட்டா் சுற்றளவில் உள்ள பிற கடைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இடத்தின் உரிமை தொடா்பான பத்திரங்கள், வாடகை இடமாக, கடையாக இருப்பின், வாடகை பத்திரம், பட்டாசுக் கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபணை இல்லை என்ற நோட்டரி பத்திரம் மற்றும் மின் மற்றும் தண்ணீா் ரசீது, முகவரி மற்றும் அடையாள சான்றுகள் கட்டாயம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விண்ணப்பம் சமா்ப்பித்தாலும், தகுதி உடைய விண்ணப்பங்களுக்கு மட்டும் பட்டாசுக் கடை வைக்க உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.