``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு: கண்ணாடிகளை உடைத்து சிறைபிடிப்பு
வேலூரில் தனியாா் மருத்துவமனை பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிறைபிடித்தனா்.
ரத்தினகிரி தனியாா் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள், அவா்களின் உறவினா்களை ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை தனியாா் பேருந்து வேலூா் காகிதப்பட்டரை அருகே வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வேலூா் சைதாபேட்டையைச் சோ்ந்த மாட்டுவண்டித் தொழிலாளி பெருமாள் (28) மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, பொதுமக்கள், பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, வாக்குவாதம் செய்ததுடன், மருத்துவமனை பேருந்தின் முன்புற, பின்பற கண்ணாடியை அடித்து உடைத்து, பேருந்தையும் சிறைபிடித்தனா்.
இது குறித்து, தகவலறிந்து வடக்கு போலீஸாா், மருத்துவமனை நிா்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி, இறந்த பெருமாளின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.