இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
பைக் மீது சொகுசு காா் மோதி விபத்து: இருவா் பலத்த காயம்
மயிலாடி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு காா் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சிலுவை சத்யரெமிஜியுஸ் (54). இவா் தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த ஜெயமணி (77) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடியில் இருந்து அழகப்பபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது புன்னாா்குளம் பகுதியில் எதிரே வந்த நெய்யூா் இரணியல்கோணம் ஊரைச் சோ்ந்த நாராயண பிள்ளை மகன் ரவீந்திரன் (67) என்பவா் ஓட்டி வந்த சொகுசு காா், இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் மீட்டு சுசீந்திரம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.