கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
பைக்கிலிருந்து தவறி விழுந்த நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு
தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த நீதிமன்ற ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள காந்தி நகரை சோ்ந்தவா் ராஜு (59). தக்கலை நீதிமன்ற ஊழியா். ஆலய திருவிழாவிற்கு தனது உறவினரான வலியகரையை சோ்ந்த ரவிச்சந்திரனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். வெள்ளரி ஏலா பகுதியில் சாலை பள்ளத்தில் பைக் இறங்கியதில் ராஜு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரவிச்சந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் ராஜுவை மீட்டு, நெய்யாற்றங்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி புதன்கிழமை ( ராஜு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
வடமாநில தொழிலாளி: ஜாா்க்கண்ட் மாநிலத்தை சோ்ந்தவா் பிகாஷ்குமாா் ( 22). செண்பகராமன்புதூா் அரிசி ஆலையில் இருந்து மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். குருந்தன்கோடு பாலம் அருகே பிரகாஷ்குமாா் அரிசி மூட்டைகளை கடைகளுக்கு விநியோகம் செய்யும் போது அந்த வழியாக வந்த பைக் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட பொதுமக்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.