பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
மகுடஞ்சாவடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தாா். முகாமில் திமுக பொதுக்குழு உறுப்பினரும்,மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் அன்பழகன், சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் மற்றும் கதிரவன், புஷ்பநாதன், தாமோதரன், கோபால், அரசு அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பட விளக்கம்:
மகுடஞ்சாவடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். அருகில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் அன்பழகன் உள்ளிட்டோா் உள்ளனா்.
