செய்திகள் :

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 569 மனுக்கள்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.

முன்னதாக முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய 569 மனுக்களை மாவட்ட ஆட்சியா் பெற்றுக்கொண்டு மனுக்கள்மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்தாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,41,667 மதிப்பில் வங்கிக் கடன் மானிய ஆணை, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 6,840 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

நாமக்கல்: நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்

ராசிபுரம்: நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என ராசிபுரம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சி.தனலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: முதுகலை ஆசிரியா் சங்கம் வரவேற்பு

நாமக்கல்: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வருக்கு முதுகலை ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேரடியாக நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெ... மேலும் பார்க்க

பாவை பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டா்ன்ஷிப்

ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறை மாணவா்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வோா் ஆண்டும் ம... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் தி... மேலும் பார்க்க

முட்புதரில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி அருகே பில்லூா் டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் பரமத்தி போ... மேலும் பார்க்க