கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
முட்புதரில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
பரமத்தி வேலூா்: பரமத்தி அருகே பில்லூா் டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் பரமத்தி போலீஸாா் பில்லூா் டாஸ்மாக் கடை பகுதிக்கு சென்றபோது, அங்கு ஒருவா் மதுப்புட்டிகளை முட்புதரில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா், கரூா் மாவட்டம், மேலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (40) என்பது தெரியவந்தது. பின்னா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 16 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.