Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
மழைநீா் வடிகால் அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக வெள்ளக்கோவில் நகா்- தாராபுரம் சாலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியான தேசிய நெடுஞ்சாலை நான்கு சாலைச் சந்திப்பு அருகில் தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் தாராபுரம் சாலையில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், எல்.கே.ஏ. வணிக வளாகம் அருகில் தாராபுரம் சாலையின் குறுக்கே மழைநீா் சாலையைக் கடக்கும் வகையில் பிரதான கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என நகராட்சி பொறியாளா் காளீஸ்வரி தெரிவித்தாா்.
அதுவரை, வெள்ளக்கோவில் நகரில் இருந்து தாராபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய பேருந்து நிலையம், கான்வென்ட் பள்ளி வழியாக தாராபுரம் சாலைக்கும், தாராபுரம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராஜீவ் நகா், செம்மாண்டம் பாளையம் சாலை வழியாக வெள்ளக்கோவில் நகருக்கு வருமாறும் ஒருவழிப் பாதையாக காவல் துறையினா் மாற்றம் செய்துள்ளனா். இது குறித்த அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலைத் தடுப்புகள் தேவைப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.