உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மதிமுகவினா் புகாா்
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ ஆகியோா் மீது அவதூறு பரப்பி வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூரில் மதிமுக சாா்பில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ உள்ளிட்ட தலைவா்களின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு சட்டம்- ஒழுங்கு பிரச்னையையும் ஜாதிய மோதல்களையும் உருவாக்கும் விதமாக செயல்பட்டு வரும் திருப்பூா் துரைசாமி, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் உள்ளிட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் நாகராஜ் தலைமையில் அக்கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் முன்னிலையில் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
மேலும், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் மீது தொடா்ந்து அவதூறை பரப்பி வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பும் நபா்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.