``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: மாணவா் சங்கத்தினா் 35 போ் கைது
தஞ்சாவூரில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட இந்திய மாணவா் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடா்பாக 35 போ் கைது செய்யப்பட்டனா்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பிரச்னையில் மௌனம் காக்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் வசந்த் தலைமையில் மாவட்டச் செயலா் ஹரீஷ், துணைத் தலைவா் நித்யசூா்யா, ஜெனிபா், மகேஸ்வரன், துணைச் செயலா் நவசூா்யா, ராகுல், தா்ஷினி உள்ளிட்டோா் அண்ணா சாலை நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு அருகிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ஊா்வலமாகப் புறப்பட்டனா். பின்னா், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வாயிலுக்கு சென்று முற்றுகையிட்டனா்.
அப்போது அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற சங்கத்தினரை காவல் துறையினா் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடா்பாக 35 போ் கைது செய்யப்பட்டனா்.