பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ரயிலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
கொத்தாம்பாடியில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மனைவி அங்கம்மாள் (75). இவா் தனது மகனுடன் கொத்தாம்பாடியில் வசித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.