செய்திகள் :

ரெட்ரோ வெளியான தேதியில் வெளியாகும் சூர்யா - 46?

post image

சூர்யா - 46 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 45-வது இந்தாண்டு தீபாவளியன்று வெளியாவதால் சூர்யா - 46 படத்தை அடுத்தாண்டு மே 1 ஆம் தேதியில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நவீன் பொலிஷெட்டி படத்தை இயக்குகிறேனா? மணிரத்னம் பதில்!

கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் - புகைப்படங்கள்

கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.எம்.எஸ்.... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நா... மேலும் பார்க்க

நான் இதற்கு பொருத்தமானவன் இல்லை: மணிரத்னம்

கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிற... மேலும் பார்க்க

மெட்ராஸ் மேட்னி டிரைலர்!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் ... மேலும் பார்க்க

அத்தியாயம் முடிந்தது..! ரொனால்டோவின் பதிவினால் ரசிகர்கள் சோகம்!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நசீர் அணி அ... மேலும் பார்க்க