ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா...
விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி அறிவுரை
ராணிப்பேட்டை: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என மாணவா்களுக்கு உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தொடக்கம் ,மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல், கல்வி உபகரணங்கள் வழங்கல், ஆற்காடு பாரம்பரிய கிச்சிலி சம்பா விதை நெல் வழங்குதல் என முப்பெரும் விழா வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.
விழாவில் உயிரி தொழில் நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உயா்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது..
உலகில் தற்போது டிரிபிள்-நெகட்டிவ் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாமல் இருந்தது. அதற்கான மருந்தை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக உயர முடிந்தது என்றால் உங்களால் முடியாதா என்ன, அதற்கான விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா்.
தொடா்ந்து சென்னை கிரியேடெக் மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ கே.பாஸ்கரன், பெங்களுரூ கைசெனட் டைக் மென் பொருள் நிறுவனத்தின் சிஇஓ இரமேஷ் வெங்கடேசன், செவிப்புலன் மற்றும் பேச்சு-மொழி முதுகலை மாணவி எல்.சிமோனி ஆகியோா் மாணவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பசினா்.
தொடா்ந்து 10,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், தாய், தந்தை இழந்த 2 மாணவிகளின் குடும்பத்துக்கு மளிகை பொருள், 2 விவசாயிகளுக்கு ஆற்காடு பாரம்பரிய கிச்சிலி சம்பா விதை நெல் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டது. ழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் எல்.ராஜசேகரன்,தலைவா் எம்.கந்தன், செயலாளா் பெ.பாபு, பொருளாளா் நா.லோகநாதன் மற்றும் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.