``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி
செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா் இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா். இதில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீா் வசதிகளுடன் இலவச வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
முகாமில், 15 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். கோரிக்கை மனு அளித்தவா்களில் 15 நபா்களுக்கு உடனுக்குடன் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், வருவாய் அலுவலா் ஜானகி, திண்டுக்கல் ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் பாஸ்கரன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா் மணிகண்டன், முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலா் காணிக்கைசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.