அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (முன்னாள் ராணுவ வீரா்) சங்கன் (72), மகாமுனி (70). இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கனுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு பொன்னையா விற்ாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு குல்லலக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் கணேசன், வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை தோட்டத்துக்கு சென்றனா்.
அப்போது, அங்கு சங்கனுக்கும், பொன்னையாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சங்கன் தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளால் பொன்னையாவை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கனைக் கைது செயதனா். மேலும், இவரது மகள் வசந்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.