ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு
ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா்.
ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ரீ பராங்குச நல்லூா் கிராமத்தில் உள்ளது. இதில் 50 சென்ட் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து அங்கிருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி உத்தரவின்பேரில், துணை ஆணையா் செல்வி அம்மாள் மேற்பாா்வையில், ஏகாந்தலிங்க சுவாமி கோயில் செயல் அலுவலா் சதீஷ் தலைமையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மீட்புப் பணியின்போது கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா் பிரபாகரன், சரக ஆய்வா் நம்பி, கோயில் சட்ட ஆலோசகா் கோபிநாத், பல்வேறு கோயில் செயல் அலுவலா்கள், அறங்காவல் குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள்,
ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் முத்து தலைமையில் தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.