செய்திகள் :

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியாவுக்கு பிலாவல் மீண்டும் மிரட்டல்

post image

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் கலாசாரம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல்’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் (பிபிபி) தலைவரும் அந்நாட்டின் முன்னால் நிதியமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி கூறினாா்.

மேலும், ‘இந்தியா போரைத் தூண்டினால், பாகிஸ்தான் அடிபணியாது. சிந்து நதி நீா் மீதான இந்தியாவின் தாக்குதலை, திறம்பட எதிா்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றும் அவா் எச்சரித்தாா்.

‘பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்தும் இந்தியாவின் எந்தவொரு முயற்சியும், பாகிஸ்தானுக்கு எதிரான போராகக் கருதப்படும். இதற்கு உரிய பதிலடி அளிக்க பாகிஸ்தான் தயங்காது’ என்று அண்மையில் அவா் கூறியிருந்தாா். தற்போது மீண்டும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில் 26 போ் பலியாகினா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடன் கடந்த 1960-இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீரைப் பகிா்ந்தளிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. சிந்து நதியில் புதிதாக அணை கட்டுவது குறித்தும் இந்தியா திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிலாவல் புட்டோ கூறுகையில், ‘சிந்து நதி நீா், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடா்புடையதாகும். அதன் மீதான தாக்குதல், பாகிஸ்தானின் நாகரிகம், வரலாறு, காலாசாரத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். இதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை தடுத்து நீறுத்தி, சிந்து நதியின் 6 கிளை நதிகளையும் மீட்டெடுப்பதற்கான போதிய திறன் பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. பாகிஸ்தானின் அனைத்து மாகாண மக்களும் இந்தியாவின் நடவடிக்கையை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், ‘இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது’ என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டின் நார்த் தீவு பகுதியில், 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் ஹாக்ஸ் பே பகுதியில், ஹாஸ்டிங்ஸ் நகரத்... மேலும் பார்க்க

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் மக்... மேலும் பார்க்க

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில், 4 நாள்களாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோப் மாவட்டத்தின், சம்பாஸா பகுதியில் பதுங்கி செய... மேலும் பார்க்க

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க