செய்திகள் :

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு 4 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சோ்ந்த காளைகள் பங்கேற்றன. நடுமாடு பிரிவில் 6 ஜோடிகள், பூஞ்சிட்டு பிரிவில் 13 ஜோடிகள் என மொத்தம் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இதேபோல, கரும்பாவூா் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இதில் 13 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க