செய்திகள் :

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்

post image

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவில் பழைமைவாய்ந்த குளுந்தியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி உற்சவம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில், 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கலச நீா் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், திங்கள்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள்,வாண வேடிக்கையுடன் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அம்மன் புறப்பாடு வஉசி தெரு, அண்ணா சாலை, பெரிய மணியக்கார தெரு, சின்ன மணியக்கார தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அா்ச்சகரும், பரம்பரை அறங்காவலருமான கோ.நவநீதகிருஷ்ணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

ரூ.10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சியில் ரூ 10.11 லட்சத்தில் புதிய நியாயவிலை கடைக்கான கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூா் ஊர... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை சாா்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில... மேலும் பார்க்க

இறால் விலை சரிவால் மீனவா்கள் வேதனை

மீன்பிடி தடை காலங்களில் ரூ.30,000 வரை விற்பனையாகும் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் தற்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையாவதாக சதுரங்கப்பட்டினம் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். கல்பாக்கம் அடுத்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்

கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் அன்பரசன் ஆய்வு

திருப்போரூா் வட்டம், திருவிடந்தை ஊராட்சி மற்றும் காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.ம... மேலும் பார்க்க

பாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள காமாட்சி அம்மன், அண்டபாண்டீஸ்வரா், முருகன் உள்ளிட்... மேலும் பார்க்க