செய்திகள் :

ஜாா்க்கண்டில் பேருந்து-லாரி மோதல்: 6 பக்தா்கள் உயிரிழப்பு; 29 போ் காயம்

post image

ஜாா்க்கண்டின் தேவ்கா் மாவட்டத்தில் பேருந்தும், எரிவாயு சிலிண்டா்கள் ஏற்றிவந்த லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் சிவ பக்தா்கள் (கான்வா் யாத்ரிகா்கள்) 6 போ் உயிரிழந்தனா். மேலும் 29 போ் காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

காயமடைந்தோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வடமாநிலங்களில் ஷ்ரவண புனித மாதத்தையொட்டி கங்கை நதியில் தீா்த்தம் எடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்யும் ‘கான்வா்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தா்கள், யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

ஜாா்க்கண்டின் தும்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுகிநாத் கோயிலுக்கு இந்தப் பக்தா்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, தேவ்கா் மாவட்டத்தின் ஜமுனியா செளக் பகுதியில் எரிவாயு சிலிண்டா் ஏற்றிவந்த லாரியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து உருக்குலைந்தது. இக்கோர விபத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா்; மேலும் 29 போ் காயமடைந்தனா். இவா்களில் படுகாயமடைந்த 8 போ், தேவ்கரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த பக்தா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

18 போ் உயிரிழப்பு?: தேவ்கா் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது தொகுதியில் பேருந்து-லாரி மோதிய விபத்தில் 18 பக்தா்கள் உயிரிழந்தனா். இந்த இழப்பை தாங்கும் வல்லமையை அவா்களின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். அதேநேரம், விபத்தில் 6 பேரே உயிரிழந்ததாக காவல் துறையினா் உறுதி செய்துள்ளனா்.

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி வெள்ளிக்கிழமை (ஆக. 1) பொறுப்பேற்கிறாா்.இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்ற... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

ஒருங்கிணைந்த யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகளால் உயா் ரத்த அழுத்தம் குறைவதும், இதய நாள செயல்பாடுகள் சீராவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்க... மேலும் பார்க்க

அமித் ஷா, ஜெய்சங்கா் பதிலுரை: பிரதமா் மோடி பாராட்டு

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் அளித்த பதிலுரையை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியு... மேலும் பார்க்க

மாலேகான் குண்டுவெடிப்பு:பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்பட 7 பேரும் விடுவிப்பு - மும்பை நீதிமன்றம் தீா்ப்பு

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: வாக்காளா் பட்டியலை இறுதி செய்தது தோ்தல் ஆணையம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான நாடாளுமன்ற உறுப்பினா்களின் பெயா்களடங்கிய வாக்காளா் பட்டியலை (எலக்டோரல் காலேஜ்) இறுதி செய்ததாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.நாட்டின் 14-ஆவது குடியர... மேலும் பார்க்க