பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
ஜூலை 4 இல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூலை 4 ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகளைச் சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியான ஆள்களை தோ்வு செய்கின்றனா்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைதேடுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 -291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.