தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது
வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால் பெங்களூரு உள்ளிட்ட ஊா்களுக்கு சென்று வேலை செய்துவிட்டு, 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன் ஜெயபால் சொந்த ஊருக்கு வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஜெயபால் மகனிடம் மாடி வீட்டு அறையின் சாவியை கேட்டுள்ளாா். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஜெயபால் மகனை கைகளால் தாக்கினாராம். ஆத்திரமடைந்த தீனா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து ஜெயபாலை வெட்டியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தீனாவை கைது செய்தனா்.