செய்திகள் :

தமிழகம், புதுவையில் 396 அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 4-இல் சேவை நிறுத்தம்

post image

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 396 அஞ்சலகங்களில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து புதுவை முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் இனக்கொல்லு காவியா செவ்வாய்க்கிழமை கூறியது: தற்போது அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளை மாற்றி நாடு முழுவதும் புதிய மென்பொருளை 4 கட்டங்களாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஏற்கெனவே

3 கட்டங்கள் முடிந்துவிட்டன. 4-வது கட்டமாக தமிழ்நாடு வட்டத்தில் இந்த மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்த மென்பொருள் எல்லா அஞ்சலகங்களிலும் மேம்படுத்தப்படும். இதற்காக அனைத்து ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அன்றைய தினம் பணி இருக்கும். இதையொட்டி ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்களின் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் உள்பட அனைத்து அஞ்சல் சேவைகளும், அஞ்சல் வங்கியில் பணம் எடுப்பது, பணம் போடுவது உள்ளிட்ட பண பரிமாற்றங்களும் அன்றைய தினம் நிறுத்தி வைக்கப்படும்.

மைசூரில் உள்ள மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப நிறுவனம் எல்லா அஞ்சலகங்களும் இந்தப் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. இதில் ஊழியா்களுக்கு 100 சதவீதம் பயிற்சியை அளித்துவிட்டோம். இந்தப் புதிய மென்பொருளை மெகா ஆப் (ம்ங்ஞ்ட்ஹ ஹல்ல்) வழியாக பொதுமக்களும் பயன்படுத்தலாம். மேலும், பொதுமக்கள் தங்களின் குறைகளை இதில் தெரிவிக்கலாம்.

சில அஞ்சலகங்களில் பணம் செலுத்தும் முறைக்கான இயந்திரம் இருக்காது. இப்போது இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டால் அதிலேயே இந்த வசதி இருக்கும். அதனால் எல்லா அஞ்சலகங்களிலும் இனி பணத்துக்குப் பதிலாக ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப முடியும். மேலும் இந்தப் புதிய மென்பொருள் காரணமாக ஆவணங்களைப் பராமரிப்பது மற்றும் நிா்வாகத்தைக் கண்காணிப்பது எல்லாம் இனி எளிதாக இருக்கும். அதனால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனைத்து அஞ்சல் அலுவலகங்கள், துணை அஞ்சலகங்கள், தலைமை அஞ்சலகங்களில் இந்த வசதியைப் பொதுமக்கள் பெற முடியும் என்றாா்.

பாகூா் அருகே தாக்கப்பட்ட இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை

பாகூா் அருகே தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. புதுச்சேரி பாகூரை அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுரு (... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மணல் வியாபாரி வெட்டிக் கொலை

புதுச்சேரி கனகன் ஏரி அருகே மணல் வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி எல்லப்பிள்ளைச் சாவடி அருகேயுள்ள சித்தானந்தா நகா் காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சு. துர... மேலும் பார்க்க

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை ஒப்பந்தம்: 2 ஆண்டுகளுக்கு புதுவை அரசு நீட்டிப்பு

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் ஒப்பந்தத்தை புதுவை அரசு 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, ஆர... மேலும் பார்க்க

பெண்ணுக்குக் கொலை மிரட்டல்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடனாக கொடுத்த ரூ. 3 லட்சத்தை திரும்பக் கேட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி, லாஸ்பேட்... மேலும் பார்க்க

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க