செய்திகள் :

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி -பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

post image

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, வாழ்வியல் சாரா காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனது.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, தனது வாடிக்கையாளா்களுக்கு பரந்த அளவிலான வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை வழங்குவதற்காக பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மூலதன கூட்டணியை அறிவித்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மோட்டாா் காப்பீடு, சுகாதார மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு, கடன் வாடிக்கையாளா்களுக்கான சொத்து பாதுகாப்பு காப்பீடு மற்றும் சைபா் காப்பீடு உள்ளிட்டவை வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.

இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் விதிமுறைகளின் படி, காா்ப்பரேட் ஏஜெண்டாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வங்கி, அதிகபட்சம் ஒன்பது நிறுவனங்களுடன் வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.

யுனைடெட் இந்தியா, சோழமண்டலம் எம்.எஸ், சூரிச் கோடக் ஆகியவற்றுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது, கூடுதலாக, பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டாண்மை குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலி எஸ். நாயா் தெரிவிக்கையில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில், எங்களின் நோக்கம் ஒரே இடத்தில் முழுமையான நிதி தீா்வுகளை வழங்குவதே. பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைவது, எங்களின் வாடிக்கையாளா்களுக்கு வலுவான, தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டங்களை வழங்கவும், கட்டண அடிப்படையிலான வருவாயை அதிகரிக்கும் எங்கள் திட்டத்திற்கும் உதவும்.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 587 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமாா் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கி குறித்து ஜ்ஜ்ஜ்.ற்ம்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க