ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !
திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை: ராஜேஸ்குமாா் எம்.பி. தொடங்கிவைப்பு
திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உறுப்பினா் சோ்க்கை படிவத்தை பூா்த்தி செய்து உறுப்பினா் சோ்க்கையை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராசிபுரத்தில் முதல்கட்டமாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 79-இல் இடம் பெற்றுள்ள கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தனது கைப்பேசி மூலம் ஓடிபி பெற்று தனது உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து இல்லத்தின் கதவு மற்றும் காரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி அது குறித்து பிரசாரம் செய்தும், கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்ட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்ட வளா்ச்சி பணிகளை எடுத்துரைத்து திமுகவினா் பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். இதில் கட்சியினா் பலரும் பங்கேற்றனா்.
படவரி...
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினா் சோ்கையை தொடங்கிவைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.