சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
தூத்துக்குடியில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர தினத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மைசூா் சென்ற ரயிலில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.
தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு நிபுணா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சிவசக்திவேல், சரவணன் ஆகியோா் கொண்ட குழுவினா் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவியின் உதவியுடன், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.