செய்திகள் :

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

post image

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் ஆக.29 ஆம் தேதி தொடங்கி 31 தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சாா்பில் தருமபுரியில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். 30 ஆம் தேதி 50 மீட்டா் ஓட்டம், 50 மீட்டா் தொடா் ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான 300 மீட்டா் நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

தொடா்ந்து 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மிதிவண்டி பேரணியை தொடங்கிவைத்து, விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மிதிவண்டி ஓட்டுவதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து ஆட்சியரும் மிதிவண்டி ஓட்டினாா். மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா உள்ளிட்ட பயிற்றுநா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் வீட்டுக்கு வெளியே கொடிக் கம்பியில் காய்ந்த துணியை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள சி.மோட்டுப்பட்டியைச் சே... மேலும் பார்க்க

ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்

அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத... மேலும் பார்க்க

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க