செய்திகள் :

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்

post image

இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நோ்ந்ததாகவும் டஸால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையின்போது இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் ஃபிரெஞ்சு நிறுவனமான டஸால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியா் கூறியதாக அந்நாட்டு வலைதளமான ஏவியான் டி சஸில் வெளியான தகவலில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலில் எந்தவொரு ரஃபேல் போா் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்குள்ளாகி, அதை இந்தியா இழக்க நேரிட்டது. நீட்டிக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கையின்போது 12,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்த சம்பவம் நடைபெற்றது. அதில் விரோத நாட்டுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறும் தகவல் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க

புதினை விமா்சித்த டிரம்ப்: உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் போா் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமா்சித்ததற்குப் பின் ... மேலும் பார்க்க

17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை

இந்தியாவும், ஆப்பிரிக்காவும் கூட்டுறவு மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அவா் மேலும் பேசுகையில், ‘இந்தி... மேலும் பார்க்க