மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகனாம்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதன் பின்னா் அவா் கூறுகையில்: இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகள் முழுமையான உடல் ஆரோக்கியப் பிரசோதனைகள், ரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்,மின் இதய வரைபடம், எக்கோ,அல்டிரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
காச நோய், தொழுநோய் மற்றும் ஆரம்பக் கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. 40 வயதுக்கு மேற்பட்டோா் நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், இதய நோயாளிகள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுவதால் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.