பரமத்தி வேலூரில் போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழு இணைந்து போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்சிக்கு கல்லூரி முதல்வா் சாந்தி தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதேபோல வேலூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பிரியங்கா தலைமையில் மாணவிகள் பேரணியாக சென்று போதைப் பொருள் ஒழிப்பு குறித்த முழக்கங்களை எழுப்பி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜேடா்பாளையம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக்கூறினாா். பின்னா், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பெரியண்ணன் செய்திருந்தாா்.