டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்...
பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலர்களாக கேசவ விநாயகம், ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, டாக்டர் கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செயலர்களாக கராத்தே தியாகராஜன், கே. வெங்கடேசன் உள்ளிட்ட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வி.பி. துரைசாமி, கரு நாகராஜன் உள்ளிட்டோரும் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அமைப்பாளராக கே.டி. ராகவன், எம். நாச்சியப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.